இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
சந்தோஷம் சந்தோஷமே
இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
யார் உண்டு சொல் மனமே!
1.
நாள் மட்டும் நடத்தினாரே
நன்மையால் சூட்டினாரே
கரம் நட்டித் தூக்கினாரே
சுகம் சுகம் அவர் நிழலே
முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
எனக்கு ஓர் பொன்நாளே – இயேசு
2.
மாறிடும் மனிதப் பண்பு
விலகிடும் மனித அன்பு
போற்றுவார் தூற்றிடுவார்
இயேசுவோ அன்பில் மாறார்
மாறும் உலகில் மாறாத இயேசு
அவரையே நிதம் போற்று – இயேசு
3.
இந்திய தேசம் வளர
இளமையில் எழுந்து நின்றார்
சிறுவனே உட்கார் என்றார்
கேரியோ வென்று வந்தார்
மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
உற்சாகம் செய்வார் இயேசு – இயேசு
4.
ஆசையாய் ஆதரித்தோர்
சீற்றத்தால் அகன்றே போனார்
தேவனோ அவன் அருகில்
அதோனிராம் ஜட்சன் வென்றார்
மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
தேவனைப் பற்றி நீ வாழ் – இயேசு
5.
ஓசன்னா சொன்னோர் எங்கே?
ஓடினேன் என்றோன் எங்கே?
சிலுவையின் சுமை தணிக்கப்
பழகியோர் யாரும் இல்லை
இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
அருள் ஈயும் இயேசு நாதா – இயேசு
iyesu en dhalaivar jeevanin athipar
santhosam santhome
ikaththinil avarbol anpathayk kabbar
yar undu soul maname!
1.
nal maddum nataththinare
nanmaiyal suddinare
karam naddith thukkinare
sukam sukam avar nizhale
mukam mukam avaraith dharisikkum nale
enakku oor pon nale – iyesu
2.
maridum manidhab panbu
vilakidum manidha anbu
potrruvar thurriduvar
iyesuvo anbil marar
marum ulakil maradha iyesu
avaraiye nidham potrru – iyesu
3.
inththiya thesam valara
ilamaiyil ezhunththu nindrar
siruvane udkar endrar
keriyon vendru vanththar
manidhanin sinththai sorbu alikkum
ursakam seyvar iyesu – iyesu
4.
aasaiyay aadhariththor
setrraththal akanre ponar
thevane avan arukil
athoniram jadchan venrar
manidharais sarnththal manveeday poovay
thevanaib patrri nee vazhi – iyesu
5.
oohsanna sonnor engke?
oodinen endron engke?
siluvaiyin sumai dhanikkab
pazhakiyor yarum illai
iruthivarai nan um sarbil nirka
arul iiyum iyesu natha – iyesu